விளாத்திகுளம் அருகே தலைகீழாக கவிழ்ந்து லாரி விபத்து!

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தை அடுத்த தேசிய நெடுஞ்சாலையில் டீசல் லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  மதுரை மாவட்டம் கப்பலூர் பகுதியில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு 800 லிட்டர் டீசல் மற்றும் 4000 லிட்டர் பெட்ரோல்…

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தை அடுத்த தேசிய நெடுஞ்சாலையில் டீசல் லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

மதுரை மாவட்டம் கப்பலூர் பகுதியில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு 800 லிட்டர் டீசல் மற்றும் 4000 லிட்டர் பெட்ரோல் நிரப்பி கொண்டு இரு டேங்கர் லாரிகள் சென்று கொண்டிருந்தன. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை அடுத்த வெம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து டீசல் ஏற்றி வந்த லாரி தலைகீழாக கவிழ்த்து விபத்துக்குள்ளானது. விபத்தில் லாரியில் உள்ள டீசல் சாலையில் கொட்டி குளம் போல் காட்சி அளித்தது.

இதில் ஒட்டுநர் குமார் அதிஷ்ட வசமாக உயிர் தப்பினார். இதற்கிடையே இச்சம்பவம் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் லாரி தீப்பிடிக்காமல் இருக்க தண்ணீரை பீச்சு அடித்தனர். இந்நிலையில் டேங்கர் லாரியை மீட்டு மசார்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.இதனால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு ஒரு வழி பாதையாக வாகனங்கள் அனுப்பட்டன.

-கோ. சிவசங்கரன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.