சோளிங்கர் அரசுக் கல்லூரி வளாகத்தில் மாணவர்களிடையே திடீர் மோதல்!

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அருகே சோளிங்கர் அரசு கலை…

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே அரசு கலை
மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட
மோதல் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அருகே சோளிங்கர் அரசு கலை மற்றும்
அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட
மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை பி ஏ ஆங்கிலம்
முதலாமாண்டு பயிலும் கல்லூரி மாணவர்கள் இரு தரப்பினருக்கு இடையே,
முன்விரோதம் காரணமாக வகுப்பறையில் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

உடனடியாக கல்லூரி பேராசிரியர்கள் கல்லூரி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட
தாக்குதலை தடுக்க முயன்றனர். ஆனாலும், மாணவர்கள் வகுப்பறையில் இருந்து
வெளியேறி கல்லூரி வளாகத்தில் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
இதையடுத்து கல்லூரி நிர்வாகத்தினர் சோளிங்கர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் அடிப்படையில் போலீசார் கல்லூரிக்கு விரைந்து சென்றனர்.

மேலும், போலீசாரை பார்த்ததும் தகறாரில் ஈடுபட்ட மாணவர்கள் கல்லூரியிலிருந்து
ஓட்டம் பிடித்ததனர். ஓட்டம் பிடித்த கல்லூரி மாணவர்கள் 5 பேரை துரத்தி பிடித்த
காவலர்கள், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதனை அடுத்து கல்லூரி முதல்வர் (பொறுப்பு )சுஜாதா அளித்த புகாரைத் தொடர்ந்து,
கல்லூரியில் பயிலும் மாணவர்கள் 12 கும் மேற்பட்டவர்கள் மீது 4 பிரிவுகள் வழக்கு பதிவு
செய்து, போலீசார் பிடிபட்ட ஐந்து மாணவர்களை கைது செய்தனர்

பின்னர், மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து அறிவுரை கூறிய
காவல்துறையினர் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு,
அவர்கள் காவல் நிலைய பிணையில் டிஐஜி முத்துசாமி உத்தரவின் பேரில்
அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் சோளிங்கர் சுற்றுவட்டார பகுதியில்
பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கு. பாலமுருகன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.