சாயல்குடி அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம்!

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உசிலங்குளம் கிராமத்தில் ஸ்ரீமுத்தாலம்மன்  கோயில் 18-ம் ஆண்டு வருடாபிஷேக விழாவை முன்னிட்டு, இரட்டை மாட்டு வண்டி…

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உசிலங்குளம் கிராமத்தில் ஸ்ரீமுத்தாலம்மன்  கோயில் 18-ம் ஆண்டு வருடாபிஷேக விழாவை முன்னிட்டு, இரட்டை
மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இப்போட்டியில் மதுரை, திருநெல்வேலி,
ராமநாதபுரம், சிவகங்கை என தென் மாவட்டங்களில் இருந்து 40ற்கும் மேற்பட்ட
மாட்டு வண்டிகளும், பந்தய வீரர்களும் பங்கேற்றனர்.

மேலும், மூன்று பிரிவுகளாக நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில், வெற்றி
இலக்கை நோக்கி காளைகள் சீறிப்பாய்ந்து சென்றன. இதில் முதல் நான்கு
இடங்களை பிடித்த மாட்டுவண்டி பந்தய வீரர்களுக்கும், காளைகளுக்கும் ரொக்க
பணம் நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்த மாட்டுவண்டி பந்தயத்தை காண,
சாலையில் இருபுறமும் பார்வையாளர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்து சென்றனர்.

கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.