தெலங்கானா மாநிலத்தில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் விவசாயிகள் உழுதபோது அவர்களுக்கும் வனத்துறையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
தெலங்கானா மாநிலம் மெகபூபாபாத் மாவட்டத்திலுள்ள மடக்கூடம் கிராமத்திற்கு அருகே இருக்கும் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை டிராக்டர் மூலம் உழுத விவசாயிகள் அதில் பயிரிடுவதற்கான ஆயத்த பணிகளை செய்து வந்தனர். அப்போது அங்கு வந்த வனத்துறையினர் விவசாயிகளை தடுத்து நிறுத்தி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் ஆவேசமடைந்த விவசாயிகள் மற்றும் பெண்கள் கட்டைகளை எடுத்து வனத்துறையினரை விரட்டினர். இதனால் அங்கு இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பதற்றம் நிலவியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து வனத்துறையினர் அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு சிஆர்பிஎப் போலீசார், மற்றும் மாநில காவல்துறையினர் வந்தனர். பின்னர் துப்பாக்கி முனையில் விவசாயிகளை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக மெகபூபாபாத் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.