டொவினோ தாமஸை காண குவிந்த ரசிகர்கள்; மால் எங்கும் தென்பட்ட மனிதத் தலைகள்

புதிய மலையாள திரைப்பட அறிமுக விழாவை காண பல ஆயிரம் மக்கள் திரண்டதால் நிகழ்ச்சி ரத்து-ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.  2012ம் ஆண்டு வெளியான “பிரபுவிந்தே மக்கால்” என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் டோவினோ…

புதிய மலையாள திரைப்பட அறிமுக விழாவை காண பல ஆயிரம் மக்கள் திரண்டதால் நிகழ்ச்சி ரத்து-ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 

2012ம் ஆண்டு வெளியான “பிரபுவிந்தே மக்கால்” என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் டோவினோ தாமஸ். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மின்னல் முரளி சூப்பர் ஹீரோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது.

தற்போது ஆஷிக் உஸ்மான் இயக்கிய “தல்லுமாலா” திரைப்படத்தில் டொவினோ தாமஸ் , கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த திரைப்படமாக உருவாகியுள்ளது. பட ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வந்தனர். தல்லுமாலா திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், கோழிக்கோட்டில் படத்தின் அறிமுக காட்சி வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கோழிக்கோட்டில் உள்ள மால் ஒன்றில் பட விளம்பரத்திற்கான நிகழ்ச்சி  நடைபெற இருந்தது. அதில், டோவினோ தாமஸ் மற்றும் கல்யாணி பிரியதர்ஷனைக் காண ஆயிரக்கணக்கானோர் மாலின் முன்பு குவிந்தனர். மேலும், நடிகர்கள் வரும் நேரம் நெருங்க நெருங்க, மால் முழுவதும் மனித கடலாக காட்சியளித்தது. இதனால் அப்பகுதியில் கூட்டம் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் படத்தின் அறிமுக காட்சி ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.