குழந்தையின் மருத்துவ செலவிற்கு நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் மூலம் கோரிக்கை

சாத்தூரில் குறைபிரசவத்தில் பிறந்த குழந்தையின் மருத்துவ செலவிற்கு நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் வழியாக குழந்தையின் பெற்றோர்கள் உதவியை நாடியுள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர்கள் மீன்ராஜ் மற்றும் மகாலட்சுமி தம்பதியினர். மகாலட்சுமி…

சாத்தூரில் குறைபிரசவத்தில் பிறந்த குழந்தையின் மருத்துவ செலவிற்கு நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் வழியாக குழந்தையின் பெற்றோர்கள் உதவியை நாடியுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர்கள் மீன்ராஜ் மற்றும் மகாலட்சுமி தம்பதியினர். மகாலட்சுமி கருவுற்றிருந்த நிலையில் அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் ஏழு மாத குறை பிரசவத்தில் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவருக்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளது.


இந்த குழந்தையை, தொடர்ந்து ஒரு மாதம் இன்குபேட்டரில் வைத்த சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், அதற்கு, ஆறு லட்சம் வரை செலவாகும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தன் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க உதவுமாறு மீன்ராஜ் மற்றும் மகாலட்சுமி தம்பதியினர் நியூஸ் 7 தமிழ் அன்பு பாலமூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.