முக்கியச் செய்திகள் தமிழகம்

வேலூரில் இருந்து விமானம் பறப்பது எப்போது? ஏக்கத்துடன் வானத்தை பார்க்கும் வேலூர் மக்கள்!

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு வேலூர் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில்
இருந்தது. அப்துல்லாபுரம் ஜோலார்பேட்டை அருகில் உள்ள சுற்றுலாத் தலமான ஏலகிரி
மற்றும் வேலூர் கோட்டைக்கு ஏராளமான ஆங்கிலேயர்கள் வந்து செல்வதற்காக அவர்களுக்கு சாலை மார்க்கத்தை பயன்படுத்தினர்.

தொடர்ந்து எளிதில் வந்து செல்ல வசதியாக வேலூர் அடுத்த அப்துல்லாபுரம் கிராமத்தில் 1934 ஆம் ஆண்டு சிறிய ரக விமானங்கள் வந்து செல்ல கூடிய சிறிய அளவிலான விமான நிலையம் 34 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதில் சிறிய ரக விமானங்கள் மட்டும் தரையிறங்க முடியும். சுதந்திரம் அடைந்த
பின்னர் நாளடைவில் விமான போக்குவரத்து குறைய தொடங்கியது. அடுத்து
ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு அனுமதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பல
ஆண்டுகளாக விமான நிலையம் பயன்படாமல் இருந்த நிலையில் விமான ஓடுதளம் பராமரிப்பு இல்லாததால் செடி, கொடிகள் ஆக்கிரமித்து விமான நிலையம் என்று ஒன்று வேலூரில் இருப்பதே மக்கள் மறந்தனர்.

வேலூர் மாநகரம் வளர்ச்சி அடைய தொடங்கியது முதல் வேலூருக்கு விமான சேவை தேவை என்ற கருத்து பரவலாக எழத் தொடங்கியது.

மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பயனற்ற நிலையில் உள்ள
விமான நிலையங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. அதன்படி
முதல்கட்டமாக வேலூர் விமான நிலையத்தை மீண்டும் பயன்பாட்டில் கொண்டு வர முடிவு
செய்யப்பட்டது. தொடர்ந்து வேலூர் விமான நிலையம் உயிர் பெறும் வகையில் மத்திய
விமான போக்குவரத்து ஆணையராக அதிகாரிகள் குழுவின் நேரில் ஆய்வு செய்தனர்.

அப்போது விமான நிலையம் அமைக்கப்பட்டால் பயணிகள் வருகை எந்த அளவில் இருக்கும்? லாபம் இருக்குமா? என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் குறித்து ஆய்வு
செய்யபட்டது. புவியியல் வல்லுநர்களும் புவியியல் சார்ந்த சாத்தியக்கூறுகள்
உள்ளதா என்று ஆய்வு செய்தனர்.

2016ம் ஆண்டு விமான நிலையத்தை மீண்டும் பயன்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகள்
மேற்கொள்ளப்பட்டது. சிறிய ரக விமானங்கள் செல்லும் வகையில் திட்ட அறிக்கை தயார்
செய்யப்பட்டது. பணிகளை மேற்கொள்ளும் நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியது.
புதர் மண்டி கிடந்த ஓடுதளத்தை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். தற்போது 800
மீட்டர் நீள ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது.

பயணிகள் காத்திருப்பு அறை, குழந்தைகள் பாதுகாப்பு அறை, டிக்கெட் கவுண்டர்
அலுவலகம் விமான ஓய்வு அறை, பவர் ஸ்டேஷன் ஹோட்டல்கள் உள்ளிட்ட வசதிகள் கொண்ட டெர்மினல் கட்டிடம் கட்டப்பட்டது. வாகனம் நிறுத்துமிடம் ஏற்படுத்தப்பட்டது.
இதற்கு மட்டும் விமான போக்குவரத்துத் துறை சார்பில் 61 கோடி செலவு
செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

கடந்த 2016 ஆண்டு முதல் நடைபெற்று வந்த விமான நிலையப் பணிகள் முடக்கப்பட்டு
தற்போது கிடப்பில் போடப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் கூறுகையில், “கடந்த இரண்டு ஆண்டுகளாக பணிகள் முடிவடைந்து நிலையில் தான் உள்ளதாக தெரிகிறது. மாலை நேரங்களில் விளக்குகள் ஒளிர்ந்தது கொண்டுதான் இருக்கிறது. வேலூருக்கு விமான நிலையம் வந்தால் எங்களுக்கும் போக்குவரத்து எளிமையாக இருக்கும்.
விமானத்தில் பறக்க எங்களுக்கும் ஆசையாக உள்ளது. ஆனால் இந்த விமானப் போக்குவரத்து எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

இது உள்நாட்டு விமான நிலையம் என்பதால் போக்குவரத்து செலவு குறைவாக தான்
இருக்கும்” என்று கூறினார்.

இதுகுறித்து நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி அளித்த வேலூர் பாராளுமன்ற உறுப்பினர்
கதிர் ஆனந்த், விமான நிலையப் பணியில் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும்.
கூடுதலாக 11 ஏக்கர் நிலம் இருந்தால் பணிகள் அனைத்தும் முடிவை பெறும், ஆனால்
இந்த நிலத்தை கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கலுக்கு கூடிய விரைவில் தீர்வு காணப்படும் என கூறினார்‌.

மேலும் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்ததும் விமான நிலையம் இந்திய வானூர்தி
நிலையங்கள் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டு சுற்றுச்சுவர் எழுப்பபட்டு விமான
நிலையம் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவித்தார்.

தற்போது வரை இது உள்நாட்டு விமான நிலையம் என்ற நோக்கில் தான் பணிகள்
நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தக் கூடிய
சாத்தியக் கூறுகள் தற்போதைக்கு இல்லை.

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து
விமானம் டெல்லி வரை செல்லக்கூடிய அளவில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

விமானத்தில் ஏறி வானில் ஒரு முறையாவது வட்டமடித்திட வேண்டும் என்ற வேலூர்
மக்களின் ஏக்கம் நிறைவேறுவது எப்போது என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram