பாலியல் புகாரில் சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவிற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதன் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில், கேளம்பாக்கத்தில் இயங்கிவரும் தனியார் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஆதரவாக செயல்பட்டதாக, பள்ளியின் ஆசிரியைகள் மற்றும் ஊழியர்களும் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்த நிலையில், சிறையிலிருந்த சிவசங்கர் பாபாவிற்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதனையடுத்து, அவரை, சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போலீசார், அங்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஏற்கனவே சிவசங்கர் பாபாவிற்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இரண்டாவது முறையாக சிவசங்கர் பாபாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.







