முக்கியச் செய்திகள் விளையாட்டு

டி20 கிரிக்கெட்டில் 14,000 ரன்கள்: கிறிஸ் கெய்ல் புதிய சாதனை

டி20 கிரிக்கெட் போட்டிகளில் 14,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் கிறிஸ் கெய்ல் படைத்துள்ளார்.

டி20 கிரிக்கெட்டில், உலகின் சிறந்த வீரராக கருதப்படும் கிறிஸ் கெய்ல், ரசிகர்களால் ’யுனிவெர்சல் பாஸ்’ என்று அழைக்கப்படுகிறார். இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல், வெஸ்ட் இண்டீஸின் கரீபீயன் ப்ரீமியர் லீக், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 தொடர், பங்களாதேஷ் ப்ரீமியர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக் மற்றும் சாம்பியன்ஸ் லீக் டிராபி உள்ளிட்ட பல்வேறு டி20 தொடர்களில் கிறிஸ் கெய்ல் விளையாடியுள்ளார்.

இதுவரை 431 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 14,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 67 ரன்கள் விளாசியபோது அவர், இந்த மைல்கல்லை எட்டினார்.

37.55 சராசரியுடன், 1,083 பவுண்டரிகள், 1,028 சிக்சர்களுடன் இந்த சாதனையை கெய்ல் படைத்துள்ளார். அதே போல், 22 சதங்களையும் கெய்ல் அடித்துள்ளார். அதிக சிக்சர்கள், ஒரு போட்டியில் அதிக ரன்கள், அதிக சதங்கள், வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக ரன்கள் என பல்வேறு சாதனைகள் கெய்ல் வசம் உள்ளது.

டி20 கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் யுனிவர்சல் பாஸின் புதிய சாதனைக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

அதிமுக தலைமையிலான கூட்டணி தான் உண்மையான வெற்றிக் கூட்டணி; பரப்புரையில் முதல்வர் பேச்சு

Saravana Kumar

காலிப்பணியிடங்களை அறிவித்தது இந்திய ரயில்வேத்துறை!

Jeba Arul Robinson

அண்ணாத்த இறுதிகட்டப் படப்பிடிப்பு: ரஜினி நாளை மேற்கு வங்கம் பயணம்

Vandhana