கேரளாவில் ஜிகா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.
கேரளாவில் தொடர்ந்து கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், தற்போது ஜிகா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா வைரசால் மஞ்சள் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பரவுகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு பரவினால், அவர் மூலம் வயிற்றில் உள்ள சிசுவும் பாதிக்கப்பட்டு உடல்நலக் குறைவு ஏற்படலாம் என்றும் குறைப்பிரசவம் அல்லது கருச்சிதைவு ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் கேரளாவில் 18 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு இருந்தது. தற்போது மேலும் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. புதிதாகப் பாதிப்புக்கு உள்ளான 73 வயது மூதாட்டி திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.