முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

வந்தான் சோழன்! – வெளியானது பொன்னியின் செல்வன்

பிரமாண்டமாக உருவாகி, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம். மேளதாளத்துடன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் கனவுப் படமான ’பொன்னியின் செல்வன்’ இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ளது. லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஷ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் பட்டாளம் கால்பதித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அண்மையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவே படத்தின் பிரமாண்டத்தை ரசிகர்களுக்கு வெளிக்காட்டியது. மேலும் இத்திரைப்படத்தின் டீசர், ட்ரெய்லர், பாடல்கள் என ஒவ்வொரு அங்கமும் வெளியாகி ட்ரெண்டானது. டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே 2 வாரங்களுக்கான டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டு சாதனை படைத்தது. இதனால் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும் பொன்னியின் செல்வன் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மணிரத்னம் எப்படி உருவாக்கி இருக்கிறார்? சோழர்களின் வரலாறு எப்படி இருக்கும் என்ற பல்வேறு கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் காட்சி இன்று காலை 4.30 மணிக்கு திரையிடப்பட்டது. தியேட்டர் வளாகத்தில் ரசிகர்கள் பேனர்கள், கட் அவுட்கள் வைத்து, மேள தாளத்துடன் கொண்டாடினர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் வெளியாகும் வரலாற்றுத் திரைப்படமாக ’பொன்னியின் செல்வன்’ உருவாகியிருப்பதால், இப்படம் பெரும் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இன்று வரை நான்தான் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர்: ஓபிஎஸ்

EZHILARASAN D

தமிழகத்தில் புதிய உச்சத்தில் கொரோனா பாதிப்பு; இன்றைய நிலவரம்!

EZHILARASAN D

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் இரண்டாம் கட்ட திட்டம்: கர்நாடக அரசுக்கு அதிமுக கண்டனம்

Arivazhagan Chinnasamy