முக்கியச் செய்திகள் தமிழகம்

நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரும்; இபிஎஸ்

2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழக சட்டச்சபைக்கான தேர்தலும் வரும் என மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுரை பழங்காநத்தம் பகுதியில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார். அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி, 2024ல் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வர உள்ளது. அப்போது அதிமுக வெல்லும். ஆட்சி பொறுப்பேற்று 16 மாத காலமாக எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை, கலைஞருக்கு நினைவு மண்டபம், நூலகம், எழுதாத பேனாவுக்கு கடலில் நினைவு சின்னம் அமைத்தது ஆகியவை தான் ஸ்டாலின் செய்த சாதனை.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அவரது அப்பாவுக்காக பல திட்டங்களை செய்த ஸ்டாலின், மக்களுக்காக எதையும் செய்யவில்லை, மதுரை மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி உள்ளது. அதிமுக ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை என சொல்லி பொய்யை மெய்யாக்க முயற்சி செய்கிறார்கள்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. எங்கு பார்த்தாலும் சர்வ சாதாரணமாக போதை பொருட்கள் புழங்கி வருகின்றன. திருமண உதவி திட்ட தொகையை உயர்த்துவோம் என சொல்லிய ஸ்டாலின், இன்று திட்டத்தையே மாற்றி விட்டார். முதியோர் உதவித் தொகை வழங்குவதில் ஸ்டாலின் அரசியல் பார்க்க கூடாது. சொத்து வரி உயர்த்தப்பட மாட்டாது என தேர்தல் அறிக்கையில் சொன்னார் ஸ்டாலின். ஆனால், சொத்து வரியை 100% உயர்த்தி உள்ளார்கள். இந்தியாவில் பல மாநிலங்கள் தமிழகத்தை விட குறைவான அளவில் மின் கட்டணத்தை வைத்துள்ளார்கள்.

ஓசியாக பேருந்தில் செல்வதாக மக்களை அமைச்சர் பொன்முடி கொச்சைபடுத்துகிறார். இது தான் திராவிட மாடல், அமைச்சர் மூர்த்தி பிரம்மாண்டமாக மகன் திருமணத்தை நடத்தினார். இதற்கு எங்கிருந்து பணம் வந்தது, கமிஷன் கலெக்ஷன் கரப்ஷன், 30 கோடி ரூபாய் செலவில் ஆடம்பர திருமணம் நடத்தி உள்ளார். 38 திட்டங்கள் அறிவித்து அதற்கு 38 குழுக்கள் அமைத்து உள்ளார். குழு அமைப்பதற்கு விருது அளிக்க வேண்டும் என்றால் அது ஸ்டாலினுக்கு தான் வழங்க வேண்டும் என பேசினார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“நாங்கள் அனைவரும் உழைப்பால் வளர்ந்துள்ளோம்” முதல்வர் பழனிசாமி!

Halley Karthik

நடிகர் விக்ரமிற்கு கொரோனா தொற்று உறுதி

Arivazhagan Chinnasamy

இருவீட்டாரின் சம்மதத்துடன் விரைவில் திருமணம்- முனீஸ் ராஜா

Web Editor