உதயநிதி ஸ்டாலின் சின்ன கருணாநிதி என இயக்குநர் கே.ராஜன் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னையில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற கருணாநிதி நினைவு நாள் நிகழ்ச்சியில் இயக்குநர்கள் பார்த்திபன், பாண்டியராஜன், கே.ராஜன், நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், கருணாநிதி என்ற ஒரு வார்த்தையால் தான் நான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன் என்றார். சின்ன பாபா பெரியப்பாப்பா நடிப்பினை பார்த்து எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.
என்னை பெற்றவர்கள் மூன்று தந்தையார்கள் அதில் எனது தந்தை, சிவாஜி மற்றும் கருணாநிதி என தெரிவித்தார். கருணாநிதியை போல் உழைப்பவரை பார்க்க முடியவில்லை. நீரும் , நிலமும் நிலைத்து இருக்கும் வரை கருணாநிதி வாழ்ந்து கொண்டு இருப்பார் என கூறினார். கருணாநிதி போட்ட பிச்சை தான் எனக்கு என குறிப்பிட்ட அவர், கருணாநிதி வழியில் ஆட்சியினை மு.க.ஸ்டாலின் திறன்பட செய்து வருகிறார் என தெரிவித்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் கே.ராஜன், கருணாநிதியின் சிசியன் தான் நடிகர் பார்த்திபன் என்றார். யாரை பற்றி கருணாநிதியிடம் போட்டு கொடுத்தாலும் அதனை எப்போதும் கேட்டு கொள்ள மாட்டார் என தெரிவித்தார். திருட்டு விசிடி ஒழிப்பினை முன்னேடுத்தவர் கருணாநிதி என தெரிவித்த அவர், உதயநிதி ஸ்டாலின் சின்ன கருணாநிதி என புகழாரம் சூட்டினார்.
எனது மகனின் திருமணத்திற்கு அழைத்தவுடன் நேரில் வந்து ஆசீர்வாதம் செய்தவர். நான் நடத்தி வரும் காமராஜர் பள்ளி அருகே இந்து சமயத்திற்கு சொந்தமான இடத்தில் ஒரு ரவுடி அட்டகாசம் செய்து வந்தார், உடனே கருணாநிதியை சந்தித்து மனு கொடுத்தேன் அந்த இடத்தினை மீட்டு கொடுத்து பள்ளிக்காக ஒப்படைத்தார் என கே.ராஜன் தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்








