முதல்முறையாக ராணுவம் சாராத பொதுமக்களில் ஒருவரை விண்வெளிக்கு அனுப்பிய சீனா!!

ராணுவம் சாராத பொதுமக்களில் ஒருவரை தேர்வு செய்த சீனா, முதன்முறையாக அவரை விண்வெளிக்கு அனுப்பி உள்ளது. விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை சீனா முன்னெடுத்து வருகிறது. இதற்காக கோடிக்கணக்கில் முதலீடு செய்துவரும் சீனா, அதற்காக…

ராணுவம் சாராத பொதுமக்களில் ஒருவரை தேர்வு செய்த சீனா, முதன்முறையாக அவரை விண்வெளிக்கு அனுப்பி உள்ளது.

விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை சீனா முன்னெடுத்து வருகிறது. இதற்காக கோடிக்கணக்கில் முதலீடு செய்துவரும் சீனா, அதற்காக ராணுவம் சாராத சாமானியர்களில் ஒருவரை தேர்வு செய்து அனுப்ப திட்டமிட்டது. அந்த திட்டத்தின்படி, கையி ஹைசாவோ என்ற பேராசிரியரை தேர்ந்தெடுத்தது.

இந்த நிலையில், இவர் உள்பட இரண்டு விண்வெளி வீரர்கள் அடங்கிய குழுவினர், ஜிகுவான் செயற்கைகோள் ஏவுதள மையத்தில் இருந்து ஷென்சௌ – 16 விண்கலம் மூலம் தியாங்காங் விண்வெளி மையத்திற்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் வீரர்களுக்கு மாற்றாக இவர்கள் அனுப்பி வைக்கப்படுவதாக சீனா தெரிவித்துள்ளது.

இதுவரை சீன ராணுவத்தின் அங்கமான சீன விண்வெளி வீரர்கள் மட்டுமே அனுப்பப்பட்ட நிலையில், முதன்முறையாக ராணுவம் சாராத பொதுமக்களில் ஒருவரை சீனா விண்வெளிக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.