கொரோனா பெருந்தொற்றிலும் பொருளாதார வளர்ச்சியில் சீனா!

கொரோனா பெருந்தொற்றால் கடந்த ஆண்டு முதல் பெரும்பாலான உலக நாடுகளின் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் உருவான சீனாவில் இந்தாண்டின் முதல் நிதியாண்டில் உள்நாட்டு உற்பத்தி 18.3% வளர்ச்சி அடைந்து…

கொரோனா பெருந்தொற்றால் கடந்த ஆண்டு முதல் பெரும்பாலான உலக நாடுகளின் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் உருவான சீனாவில் இந்தாண்டின் முதல் நிதியாண்டில் உள்நாட்டு உற்பத்தி 18.3% வளர்ச்சி அடைந்து சாதனைப்படைத்துள்ளது.

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக சீனா உள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்திலும் சீனாவின் தொழில்துறை நடவடிக்கைகள் மற்றும் ஏற்றுமதிகள் காரணமாக அந்நாட்டின் பொருளாதாரம் முதல் நிதியாண்டிலேயே வளர்ச்சியைக் கண்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியது. ஆனால் அந்நாட்டு அரசு மேற்கொண்ட கடுமையான நடவடிக்கையின் மூலம் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ள அதேநேரத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் அவர்கள் முன்பைவிட அதிக கவனம் செலுத்தியுள்ளனர்.

இது குறித்து பேசிய சீன புள்ளியியல் துறை செய்தி தொடர்பாளர் லியு ஐஹுவா, “நாட்டின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி சதவீதம் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா நோய் தொற்றிலும் முக்கிய துறைகளைக் கவனப்படுத்தியதால் இந்த நிலையை அடைய முடிந்துள்ளது. நாட்டில் தொழில்துறை வளர்ச்சி 14.1% ஏற்றத்தைக் கண்டுள்ளது. அதேபோல் சில்லறை வர்த்தகத்தில் 34.2% வளர்ச்சியைக் கண்டுள்ளது.


கொரோனாநோய் தொற்று காலத்திலும் சீனாவில் நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை 5.3% குறைந்துள்ளது. சீனாவின் முதல் நிதியாண்டு வளர்ச்சிக்கு நுகர்வு, தொழில் துறைகளின் வளர்ச்சி கொரோனா நோய் தொற்று காலத்திலும் முக்கியத்துவம் அளித்ததே இந்த வளர்ச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.