சீனா ராணுவ பட்ஜெட் 20,900 கோடி!

சீனா ராணுத்திற்கான நிதியானது கடந்த பட்ஜெட்டிலிருந்து 3 மடங்காக உயர்தப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்திற்கான நிதியை விட இது 3 மடங்கு அதிகமாகும். சீனா ராணுவ பட்ஜெட்டை இந்திய மதிப்பீன் படி 20,900 கோடியாக மதிப்பிடலாம்.…

சீனா ராணுத்திற்கான நிதியானது கடந்த பட்ஜெட்டிலிருந்து 3 மடங்காக உயர்தப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்திற்கான நிதியை விட இது 3 மடங்கு அதிகமாகும்.

சீனா ராணுவ பட்ஜெட்டை இந்திய மதிப்பீன் படி 20,900 கோடியாக மதிப்பிடலாம். இது இந்திய ராணுவத்தின் மதிப்பை விட 3 மடங்கிற்கும் மேலாகும். சீனா நேற்று தனது பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்தை முதன் முறையாக 20,900 கோடியாக உயர்த்தியது, இந்த உயர்வானது ஆறாவது ஆண்டாக 6.8 சதவீதம் அதிகரிப்புடன் ஒற்றை இலக்க வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. கிழக்கு லடாக்கில் இந்தியாவுடன் இராணுவ மோதல் மற்றும் அமெரிக்காவுடன் வளர்ந்து வரும் அரசியல் மற்றும் இராணுவ பதட்டங்களுக்கு மத்தியில், சீனாவின் பாராளுமன்றத்தில் பாதுகாப்பு செலவினங்களை உயர்த்துவதாக, சீன பிரதமர் லி கெக்கியாங் அறிவித்தார்.

மேலும், 2020 ஆம் ஆண்டில் சீனாவின் சாதனைகள் மற்றும் 2021 ஆம் ஆண்டிற்கான பணிகளை கோடிட்டுக் காட்டிய பிரதமர் லி கெக்கியாங், “கடந்த ஆண்டு சீன ஆயுதப்படைகளுக்கு ஒரு பெரிய வெற்றி கிடைத்தது என்றும், தேசிய பாதுகாப்பு மற்றும் ஆயுதப்படைகளின் வளர்ச்சி பெரும் வெற்றியை கண்டுள்ளது. நமது ராணுவ படைகள் முழுமையான திறமையுடனும், சிறந்த நடத்தையுடனும், சீனாவின் தேசிய பாதுகாப்பைப் உறுதி செய்துள்ளது என்று அவர் கூறினார். இந்த ஆண்டு, ஆயுதப்படைகளை வலுப்படுத்துவது மற்றும் புதிய இராணுவ திறனை பற்றிய ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் சிந்தனையை நாங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்துவோம், சீன ஆயுதப்படைகளின் முழு கட்டுப்பாடு, மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவரிடம் உள்ளது. சீன இராணுவத்தின் நூற்றாண்டு விழாவிற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை நாங்கள் மனதில் கொண்டு, ஆயுதப்படைகளை தொடர்ந்து மேம்படுத்துவோம், சீர்திருத்தம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் திறமையான பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் அவர்களை சட்டத்தின்படி, பலப்படுத்துவோம், என்றும், அனைத்து மட்டங்களிலும் அரசாங்கத்தில், நாம் தேசிய பாதுகாப்பு மற்றும் ஆயுதப்படைகளின் வளர்ச்சிக்கு தீவிரமாக ஆதரவளிக்க வேண்டும், மேலும் பொதுமக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையில் பரஸ்பர ஆதரவை ஊக்குவிக்க விரிவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், இதனால் மக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையில் எப்போதும் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் லி கெக்கியாங் கூறினார்.

தென் சீனக் கடல் தொடர்பாக சீனாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டத்தின் அதிகரிப்பு அமைந்துள்ளது. இராணுவ தளவாடங்களின் விரிவாக்கத்திற்கு இடையில், புதியதாக உருவாக்கப்பட்ட இரண்டு விமானங்களுக்கும் அதற்கான விமான தளங்களையும் உருவாக்குவது உட்பட இந்த திட்டத்தில் அடங்கியுள்ளது. திபெத், மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் கருத்து வேறுபாடிற்கு இடையில், கடந்த ஆண்டு, சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முக்கிய மாநாடு நடத்தியது. இந்த மாநாட்டில், 2027-ம் ஆண்டளவில் அமெரிக்காவிற்கு இணையாக ஒரு முழுமையான நவீன இராணுவத்தை உருவாக்குவதற்கான திட்டங்களை இறுதி செய்தது.

இதுகுறித்து அந்நாட்டு தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்ற வகையில், 2021 ஆம் ஆண்டில் சீனாவின் திட்டமிடப்பட்ட பாதுகாப்பு செலவினம் 154 மில்லியன் அமெரிக்க டாலர் குறைவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. சீனா தனது பாதுகாப்பு செலவினங்களில் நிதி ஒதுக்கீடு மற்றும் பட்ஜெட் நிர்வாகத்தின் கடுமையான வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.