முக்கியச் செய்திகள் உலகம்

சிங்கப்பூரில் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் பொருட்களை டெலிவரி செய்யும் ரோபோ!

சிங்கப்பூரில் புது முயற்சியாக ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருட்களை வீட்டிற்கு டெலிவரி செய்ய ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

நிற்க கூட நேரமில்லாமல் அனைவரும் ஓடிக்கொண்டு இருக்கும் இந்த நவீன யுகத்தில் சமையலுக்கு தேவையான எண்ணெய், பருப்பு, அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் நம்மில் பலர் ஆன்லைனில் ஆர்டர் செய்தே வாங்கி வருகிறோம். ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டத்துடன் நின்று இறைச்சிகளை வாங்கி வந்த நாம் இன்று குறிப்பிட்ட அப்ளிகேசனில் எவ்வளவு இறைச்சி வேண்டும் என்பதை மட்டும் ஆர்டர் செய்தால் குறித்த நேரத்தில் நமது வீட்டுக்கு டெலிவரி செய்து விடுகின்றனர். நமது நாட்டில் இப்படி இருக்க சிங்கப்பூரில் ஒருபடி மேலே போய் ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருட்களை டெலிவரி செய்ய ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

OTSAW எனும் நிறுவனம் டெலிவரி செய்யும் பணியில் ஈடுபடுத்த 2 ரோபோக்களை வடிவமைத்துள்ளது. கேமெல்லோ என பெயரிடப்பட்ட இந்த ரோபோக்கள் தற்போது சோதனை முறையில் சுமார் 700 வீடுகள் கொண்ட குடியிருப்பிற்கு தற்போது பொருள்களை கொண்டு சேர்த்து வருகிறது. இந்த ரோபோக்கள் 3டி சென்சார், ஒரு கேமரா மற்றும் ஆர்டர் செய்த பொருட்களை வைப்பதற்காக 2 பெட்டிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது வார நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், சனிக்கிழமை அரை நாளும் பொருட்களை டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இவை ஒரு நாளில் 4 அல்லது 5 டெலிவரி செய்கின்றன. மேலும், இந்த ரோபோக்கள் ஒவ்வொரு முறை பொருட்களை டெலிவரி செய்த பின்னும் தன்னை சுத்தப்படுத்தி கொள்ள புற உதாக்கதிர்களை பயன்படுத்துகிறது என இந்த ரோபோவை வடிவமைத்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது கொரோனா பரவி வருவதால் மக்களிடம் இந்த ரோபோவின் மூலம் டெலிவரி செய்யும் முயற்சிக்கு வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Advertisement:

Related posts

நாய்களின் மோப்ப சக்தி மூலம் கொரோனாவை கண்டறிய முடியுமா?

Gayathri Venkatesan

புதிய மொபைல்களை அறிமுகபடுத்தவிருக்கும் XIAOMI மொபைல் நிறுவனம்

Karthick

முதல்வர் பழனிசாமிக்கு மக்களைப் பற்றி கவலை இல்லை : மு.க.ஸ்டாலின்

Niruban Chakkaaravarthi