உலக பணக்கார நாடுகள்; அமெரிக்காவை முந்தியது சீனா

உலக பணக்கார நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடம் பிடித்துள்ளது. சர்வதேச அளவில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த 2000ம் ஆண்டில் 156 ட்ரில்லியன் டாலராக இருந்த நாட்டின்…

உலக பணக்கார நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடம் பிடித்துள்ளது.

சர்வதேச அளவில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த 2000ம் ஆண்டில் 156 ட்ரில்லியன் டாலராக இருந்த நாட்டின் பொருளாதாரமானது 2020ம் ஆண்டில் 514 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக மூன்றில் ஒரு பங்கு வளர்ச்சியை சீனா சாதித்துள்ளது.

மெக்கின்சி & கோ நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. உலக வருவாயில் 60%க்கும் அதிகமாக பெறும் 10 நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சீனா முதலிடம் பிடித்துள்ளது.

2000ல் வெறும் 7 ட்ரில்லியன் டாலர் வளங்களை கொண்டிருந்த சீனா தற்போது 120 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை கொண்டுள்ளது. இதில் 2000ல்தான் சீனா உலக வர்த்த மையத்தில் இணைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவைத் தொடர்ந்து அமெரிக்காவும், அதனையடுத்து ஜெர்மனியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.