சீனாவில் 3 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த ஒப்புதல்!

சீனாவில் மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி போட அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சீனாவில் அண்மையில் 3 முதல் 17 வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட சீன அரசு அனுமதி…

சீனாவில் மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி போட அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

சீனாவில் அண்மையில் 3 முதல் 17 வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட சீன அரசு அனுமதி வழங்கியது. இதன் அடுத்த கட்டமாக, அவசர கால பயன்பாட்டுக்காக அந்நாட்டின் சினோவாக் நிறுவனம் தயாரித்த கொரோனா வேக் தடுப்பூசியை 3 முதல் 17 வயதிற்குட்பட்டவர்களுக்கு செலுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

சீனா நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பூசியான சினோபார்முக்கு (sinopharm) உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கியதை அடுத்து தற்போது இரண்டாவது தடுப்பூசியான கொரோனா வேக் எனப்படும் சினோவாக்கிற்கு (sinovac) கடந்த 1ஆம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியானது இரண்டு கட்ட மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் அந்த குறிப்பிட்ட வயதுடைய நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி போட ஒப்புதல் அளித்த முதல் நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது. இதுவரை அந்நாட்டில் 76 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டிருக்கிறது. சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.