முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

கொட்டித் தீர்த்த கன மழை! வெள்ளத்தில் மிதந்த மும்பை!!

தென்மேற்கு பருமழையை தொடர்ந்து

இந்தியாவில் ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவ மழைக்காலமாகும். மும்பையில் தற்போது பருவமழை தொடங்கியுள்ளது. மழை தொடங்கிய முதல்நாளிலேயே கொட்டித்தீர்த்த பெரு மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றன.

இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், புறநகர் ரயில் சேவை உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மும்பை மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தின் பல பகுதிகளில் கன மழை மற்றும், அதிகன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 77மிமீ அளவு மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சான்டா குரூஸ் பகுதியில் 60 மிமீ மழை பதிவாகியுள்ளது. மும்பயை சுற்றியுள்ள கிழக்கு, மேற்கு புறநகர் பகுதிகளில் 48.49மிமீ, 66.99மிமீ, 48.99மிமீ அளவு மழை கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது.

பருவமழை காரணமாக பல பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ள காரணத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

திமுக, அதிமுக மற்றும் அமமுக இடையே நடக்கும் யுத்தம்தான் இந்த தேர்தல் – டிடிவி தினகரன்

Gayathri Venkatesan

விவசாயத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக முதல்வர் பரப்புரை!

Gayathri Venkatesan

இணையதள பக்கம் உருவாக்கிய ட்ரம்ப்!

எல்.ரேணுகாதேவி