தந்தையுடன் ஜாலியாக தாத்தா வீட்டிற்கு சென்ற குழந்தைகள்… நொடிப்பொழுதில் நடந்த விபத்து… சோகத்தில் மூழ்கிய குடும்பம்!

சாலை விபத்தில் குழந்தைகள் கண் முன்னே தந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ராஜூவ் நகர் பகுதியைச் சேர்ந்தவர்
சோணமுத்து (46). இவர் சென்ட்ரிங் போடும் வேலை செய்து வந்தார். இந்நிலையில் சோணமுத்து இன்று காலை தனது (3 மகள்கள்) மகள்களான மதுபூதா (15), சுந்திரா(13) மற்றும் அஜிதா (9) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் திருச்சுழி அருகே அம்பனேரி கிராமத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர்கள் மேல கண்டமங்கலம் பகுதியில் சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் சோணமுத்து ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதையும் படியுங்கள் : “என் பேரனின் முதல் மைல்கல்..” – நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி பதிவு!

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்ததை ஓட்டிச் சென்ற சோணமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற அவரது மூன்று மகள்கள் காயங்களுடன் உயிர் தப்பினர்.  இந்த விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த திருச்சுழி காவல் நிலைய போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் உயிரிழந்த சோணமுத்துவின் உடலை உடற்கூராய்விற்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர். குழந்தைகள் கண் முன்னே தந்தை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.