சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி சிறுமியை திருமணம் செய்ததாக இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த தேசவிளக்கு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். 26 வயதான இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவரின் 16 வயது மகளுக்கும் திருமணம் செய்ய இருவீட்டாரும் ஏற்பாடு செய்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த தேசவிளக்கு கிராம நிர்வாக அலுவலர் சங்கர், நேரில் சென்று குழந்தை திருமணத்தை நடத்தக்கூடாது என எச்சரித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கிராம நிர்வாக அலுவலரின் எச்சரிக்கையை பொருட்படுத்தாத குடும்பத்தினர், வலுக்கட்டாயமாக சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தனர். இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சங்கர், தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சிறுமியை திருமணம் செய்ததாக செல்வகுமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.