கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பிற்காக அணிவிக்கப்படும் முகக்கவசத்தை 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அணியத் தேவையில்லை என மத்திய சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் சுகாதாரப்பணி தலைமை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரப்பணி தலைமை இயக்குநரகம் கொரோனா நோய்த் தொற்று பாதுகாப்பு குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணியத் தேவையில்லை, அதேபோல் 6-11 வயதுள்ள குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிவிக்கக்கூடாது.
11 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் மற்றும் மருத்துவர் கண்காணிப்பில் இருக்கும்போது மட்டும்தான் முகக்கவசம் அணிவிக்க வேண்டும்.மேலும் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா நோய்த் தொற்றுக்குச் சிகிச்சைக்காக அளிக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்தைப் பரிந்துரைக்கக்கூடாது.
குழந்தைகள் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அவர்களுக்கு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்புடன்தான் ஸ்டீராய்டு மருந்துகள் வழங்கப்படவேண்டும் என மத்திய சுகாதாரப்பணி தலைமை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
Advertisement: