முக்கியச் செய்திகள் இந்தியா

கொரோனா 3-வது அலையில் குழந்தைகள் பாதிக்கப்படுவார்களா?

கொரோனாவின் மூன்றாவது அலையில் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று கொரோனாவுக்கான தேசிய ஆலோசனைக் குழு தலைவர் என்.கே. அரோரா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் முதல் அலையில் முதியோரும், தற்போதைய இரண்டாவது அலையில் நடுத்தர வயதுப்பிரிவினரும் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அடுத்துவரும் 3-வது அலையில் குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக சர்வதே மருத்துவ வ்ல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.

மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பது ஆதராமற்றது என
எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா அண்மையில் தெரிவித்து இருந்தார்.

இதனிடையே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கொரோனாவுக்கான தேசிய ஆலோசனைக் குழு தலைவர் என்.கே. அரோரா, “கொரோனாவிற்கான மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவர்கள் என்பதற்கு எந்த சான்றும் இல்லை என உறுதிபட தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாடு அரசின் வெள்ளை அறிக்கை – திருமாவளவன் கருத்து

Jeba Arul Robinson

2012இல் நடிகர் முதல் 2021இல் திமுக எம்.எல்.ஏ. வேட்பாளர் வரை உதயநிதியின் பயணம்!

Gayathri Venkatesan

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி: பசுவதை- மதுரை ஆட்சியர் நேரில் ஆய்வு

Vandhana