முக்கியச் செய்திகள் இந்தியா

மிட்டாய அம்மா திருடிட்டாங்க; காவல் நிலையத்தில் புகாரளித்த 3 வயது சிறுவன்

தன்னோட மிட்டாய தாய் திருடிட்டதா சொல்லி 3 வயசு சிறுவன் காவல் நிலையத்துல புகார் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

மத்திய பிரதேச மாநிலம் புர்ஹாண்பூர் மாவட்டத்தில் உள்ளது தேதலாய் கிராமம். இந்த கிராமத்தின் அருகே உள்ள காவல் நிலையத்தில் பெண் காவல் உதவி ஆய்வாளர் ப்ரியங்கா நாயக் அமர்ந்திருந்தார். அப்போது 3 வயதேயான சிறுவன் ஒருவன் தன் தந்தையுடன் காவல் நிலையத்திற்கு வந்தனர். ஒருவேளை குழந்தையின் தந்தை தான் ஏதோ புகார் மனு கொடுக்க வந்துள்ளார் என எண்ணிய உதவி ஆய்வாளர் பிரியங்கா அந்த நபரிடம் என்னவென்று விசாரித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தான் எந்த புகார் மனுவும் கொடுக்க வரவில்லை. தன மகன்தான் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்திருப்பதாக அவர் கூறினார். இதைக்கேட்டு ஆச்சரியமடைந்த உதவி ஆய்வாளர் பிரியங்கா, அந்த சிறுவனிடம் என்னவென்று கேட்டார். அந்த சிறுவனும் காவல் நிலையத்திற்கு வந்ததால் அச்சமோ, பயமோ இன்றி தன தாயார் மீது புகார் கொடுக்க வந்திருப்பதாக மழலை மொழியில் கூறினான்.

என்ன புகார் கொடுக்கணும் என்றதும் அதே மழலை மொழியில், “தான் குளிச்சதும் நெத்தியில போட்டு வைக்க விடலேன்னு திட்டுறாங்க. அப்புறம் நான் வச்சிருந்த மிட்டாயை எல்லாம் திருடிட்டாங்க” என்றான்.

அப்படீன்னா நீ சொன்னதையெல்லாம் அப்படியே புகாரா எழுதி கொடுக்கணும். புகாரை கொடுக்குறியான்னு உதவி ஆய்வளார் கேட்க, சரின்னு அந்த சிறுவனும் சொன்னான். உடனே உதவி ஆய்வாளர் பிரியங்காவும் மற்ற புகார் மனுதார்களிடம் மனு பெறுவதற்கான வெள்ளை நிற பேப்பர், அட்டையை எடுத்து கீழே அமர்ந்துகொண்டார். அந்த சிறுவன் கூறிய புகாரை எல்லாம் அப்படியே எழுதி கையெழுத்து போடு என கூறியதும், சிறுவனும் பேனாவை வாங்கி அந்த புகார்மனுவில் கிறுக்கல் கையெழுத்தை போட்டான். இதைப்பார்த்த காவலர் ஒருவர் இந்த சுவாரஸ்யத்தை எல்லாம் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார்.

மனுவை பெற்றுக்கொண்டபின் அந்த சிறுவனிடம் உதவி ஆய்வாளர் ப்ரியங்கா, கண்டிப்பா உங்க அம்மா மேல நான் நடவடிக்கை எடுக்கிறேன் என புன்னகையுடன் கூறியதும், உதவி ஆய்வாளருக்கு டாடா கூறி மகிழ்ச்சியுடன் விடைபெற்று தந்தையுடன் புறப்பட்டு சென்றான். இந்த வீடியோவை காவலர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதும் பெரும் வைரலானது. இதை பார்த்த அந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறுவனின் தந்தையை போனில் தொடப்புக்கொண்டு பேசினார். பின்னர் சிறுவனிடம் அன்பாக பேசி புகார்மனுவை பெட்ரா உதவி ஆய்வாளர் ப்ரியங்கா நாயக்கிடமும் பேசிய கண்காணிப்பாளர், காவல் நிலையத்தில் சிறுவனிடம் நடந்துகொண்ட விதத்துக்கு பாராட்டு தெரிவித்தார்.

இதோடு சமூக வலைத்தளத்தில் இந்த வெடியோவைப்பார்த்து அசந்துபோன மத்தியபிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, அந்த சிறுவனுடன் வீடியோ காலில் அழைப்புவிடுத்து பேசினார். பின்னர் அந்த சிறுவனுக்கு தீபாவளி பண்டிகைக்காக இனிப்பு, பரிசாக ஒரு சைக்கிளும் அனுப்பிவைப்பதாக கூறியதும் சிறுவனின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. சிறுவனின் இந்த புகார் வீடியோ மாநிலம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பாகிவிட்ட

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

காமராஜர் பெயரில் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம்; நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

G SaravanaKumar

என்ஜினில் கோளாறு: அவசரமாக தரையிறங்கிய விமானம், பெரும் விபத்து தவிர்ப்பு

Halley Karthik

நடிகையும் எம்.பியுமான நுஸ்ரத் ஜஹான் மருத்துவமனையில் அனுமதி

Gayathri Venkatesan