கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க, தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில், கோயில், தேவாலயம், மசூதிகளில் பின்பற்ற வேண்டிய நோய்த்தடுப்பு வழிமுறைகள் குறித்து அனைத்து மதத் தலைவர்களோடு தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் 35-க்கும் மேற்பட்ட மதத் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், வழிபாட்டு தலங்களில் வழிபாட்டு நேரங்களை குறைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.







