தேனி, திண்டுக்கல்லில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வழியில் தீயணைப்பு அலுவலகம், காவலர் குடியிருப்புகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தேனி மற்றும் திண்டுக்கலில் அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் தொடங்கி வைக்கும் விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் சென்றார். விமான நிலையத்தில், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மதுரை மேயர் உள்ளிட்டோர் முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து மாநகர காவல் துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மதுரையிலிருந்து சாலை மார்க்கமாக சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், உசிலம்பட்டி தீயணைப்புத்துறை அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொணடார். அலுவலகத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பு பணிக்கு சென்றுவிட்டதால் அலுவலக பணியில் இருந்த முத்தழகு என்ற தீயணைப்பு வீரரிடம் அலுவலகத்தில் குறைகள் ஏதும் உள்ளதாக என்ற விவரங்களை கேட்டறிந்தார்.
அண்மைச் செய்தி: ‘பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்’
தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின், ஆண்டிபட்டி காவலர் குடியிருப்பு பகுதிக்கு சென்றார், அங்குள்ள வீடுகளுக்கு சென்று குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகளுடன் கலந்துரையாடினார். குடியிருப்பு வளாகத்தில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்த கேட்டறிந்த முதலமைச்சர், அவர்கள் வாஞ்சையுடன் அளித்த தண்ணீரை குடித்து அங்கிருந்து விடைப்பெற்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.