முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடர்பாக விரிவான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துவது தொடர்பாக அத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் இளம் பகவத் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.
அதில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் முதற்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி, கிராம ஊராட்சி மற்றும் மலைப்பகுதியில் உள்ள 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக செயல்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : 12 மணி நேர வேலை சட்டமசோதா – தமிழ்நாடு அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தபடி, 2023-24ம் கல்வியாண்டில் அனைத்து தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களின் தலைமையில் மாவட்ட கல்வி அலுவலர்கள், உதவி திட்ட அலுவலர்கள், தொடக்க கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்டோர் இத்திட்டத்தை செயல்படுத்துவார்கள் என கூறப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலர்கள் ஒவ்வொரு வட்டார அளவில், ஓர் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநரை முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கண்காணிப்பு பொறுப்பு அலுவலராக நியமிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.







