மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதலமைச்சர் விஜய் சாமி தரிசனம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதலமைச்சர் விஜய் சாமி தரிசனம் செய்துள்ளார்.

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை மதுரை அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் மாலை 4 மணி அளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றார். அப்போது வழிநெடுகிலும் மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனை தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதலமைச்சர் விஜய்க்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து பொற்றாமரை குளம், அம்மன், சுவாமி சன்னதி பிரகாரங்கள், புதிதாக புனரமைக்கப்பட்ட வீரவசந்தராயர் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் மண்டபம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.

தொடர்ந்து முதலமைச்சர் விஜய், கோயிலில் சாமி தரிசனம் செய்தார். முதல்வர் வருகையையொட்டி, சில மணி நேரத்திற்கு முன்னதாகவே மதுரை மீனாட்சி அம்மன் கோயில் காவல்துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.