நுரையீரல் தொற்று காரணமாக கொளத்தூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு கடந்த 14 நாட்களாக சென்னை அமைந்தகரையில் உள்ள MGM மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ICU-வில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை அவ்வப்போது பின்னடைவை சந்தித்தும் பின்னர் முன்னேறியும் வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து வருகிறது.
தீவிர சிகிச்சை பெற்று வரும் வி.எஸ்.பாபுவை அவ்வப்போது அமைச்சர்கள் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் இன்று சென்னை MGM மருத்துவமனைக்கு சென்று தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள வி.எஸ். பாபுவை நேரில் சந்தித்தார்.
மேலும் அவரது உடல்நிலைக் குறித்து மருத்துவர்களிடம் முதலமைச்சர் விஜய் கேட்டறிந்து, தொடர்ந்து அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை மற்றும் உடல்நிலை தொடர்பான விவரங்களையும் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.




