காஞ்சிபுரம் சிப்காட் தொழிற்பூங்காவில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!

காஞ்சிபுரத்தில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் முதலமைச்சர் விஜய் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

முதலமைச்சர் விஜய் கடந்த ஒரு மாதமாக பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மாண்வர் விடுதி, மெட்ரோ, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், தொழிற்சாலைகள், பேருந்துநிலையன் என பல்வேறு அரசுக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அந்தவகையில் இன்று, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ‘செயிண்ட் கோபெய்ன்’ என்ற கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்தார். மாம்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்காவில் அமைந்துள்ள பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான செயின் கோபின் நிறுவனம், தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து உலகத் தரத்திலான கண்ணாடி உற்பத்தி வளாகத்தை விரிவுபடுத்தியுள்ளது.

முதலமைச்சர் விஜய் வருகையை அறிந்த பொதுமக்கள் அவரி காண குவிந்ததால் பலத்த போலீஸ் பாது காப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனையடுத்து ஆய்வு முடிந்த பிறகு சாலை திரண்டிருந்த பொதுமக்களை பார்த்து முதலமைச்சர் விஜய் கையசைத்துச் சென்றார்.

இதனைத் தொடர்ந்து, ஒரகடம் சிப்காட்டில் செயல்பட்டு வரும் ரெனால்ட்–நிசான் கார் உற்பத்தி தொழிற்சாலைக்குச் சென்ற முதலமைச்சர் விஜய், அங்குள்ள உற்பத்தி செயல்பாடுகள் மற்றும் தொழிற்சாலையின் பல்வேறு பிரிவுகலை தற்போது பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.