புதுக்கோட்டை பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கவும், திட்டப் பணிகளை தொடங்கி விக்கவும் முதலமைச்சர் விஜய் இன்று புதுக்கோட்டை சென்றார். முன்னதாக
முன்னதாக பசென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்றடைந்த முதலமைச்சர் விஜய்க்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக புதுக்கோட்டை சென்ற முதலமைச்சருக்கு வழையெங்கும் சாலைகளின் இருபுறமும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு நின்று மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனையடுத்து புதுக்கோட்டை வந்தடைந்த முதலமைச்சர் விஜய் சுமார் 4 கிலோ மீட்டர் வரை ரோடு ஷோ மேற்கொண்டார். அப்போது வாகனத்தின் மீது நின்று பொதுமக்களை பார்த்து கையசைத்த வாறு சென்றார்.
இதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றடைந்த முதலமைச்சர் விஜய்க்கு காவல்துறை மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் பர்வேஸ் முதல்-அமைச்சர் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். ம.தி.மு.க. எம்.பி. துரை வைகோ, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி ஆகியோர் முதலமைச்சர் விஜய்க்கு புத்தகங்கள் கொடுத்து வரவேற்றனர். பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாரம்பரிய பயிர் வகைகளின் கண்காட்சி, மகளிர் சுய உதவிக்குழுவினர் நடத்தும் சுயதொழில்கள் தொடர்பான அரங்குகள்ஆகியவற்றை முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார். அங்கிருந்த விவசாயிகளுடன் அவர் கலந்துரையாடினார்.
இதனைத்திடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில்
இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டையில் ரூ.23.25 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை முதலமச்சர் விஜய் திறந்து வைத்தார். மேலும் ரூ.68.31 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, ரூ.11.72 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து புதுக்கோட்டையில் 13,676 பயனாளிகளுக்கு ரூ.62.73 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கும் பணியை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து புதுக்கோட்டையில் புதிதாக அமைக்கப்பட்ட நவீன பேருந்து நிலையத்தை முதலமைச்சர் விஜய் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து பேருந்து நிலையத்தை பார்வையிட்டார்.




