GOLD PRICE | புதிய உச்சத்தில் தங்கம் விலை!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2200 உயர்ந்துள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றன. சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தினசரி விலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

இதனிடையே நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,02,400-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.12,800-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் இன்று காலையில் தங்கம் விலை உயர்ந்தது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று காலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.12,825-க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,02,600-க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.200-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்திற்கும் விற்பனையானது.

இந்த நிலையில் தங்கம் விலை மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் காலையில் சவரனுக்கு ரூ. 200 உயர்ந்திருந்த நிலையில், தற்போது ரூ.2200 உயர்ந்து ரூ.1,04,800-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.275 உயர்ந்து ரூ.13,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது 1 கிலோ வெள்ளி ரூ.10,000 உயர்ந்து, ரூ.2,10,000-க்கு, ஒரு கிராம் வெள்ளி ரூ.10 உயர்ந்து ரூ.210-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.