“இடைத்தேர்தல்களில் திமுகவும், அதிமுகவும் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளனர்” – அமைச்சர் நிர்மல்குமார்!

தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தல்களை திமுகவும், அதிமுகவும் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளனர் என்று அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்த பேசினார். அப்போது, “மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடங்கிய நோக்கத்திற்காக பயன்படுத்த வேண்டும். இதுவரை மகளிர் சுய உதவிக் குழுக்களை அதிமுகவும், திமுகவும் கூட்டத்திற்க்காக மட்டுமே பயன்படுத்தியது. அதிமுக, திமுக கூட்டங்களில் கூட்டத்தை காண்பிக்க மகளிர் சுய உதவிக் குழுவினர் அழைத்து வரப்பட்டனர்.

இனிமேல் மகளிர் சுய உதவிக் குழுக்கள், மகளிர் மேம்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். மகளிர் சுய உதவிக் குழுக்களை தவறாக பயன்படுத்தினால் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்களிடம் புகார் தெரிவிக்கலாம். தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தல்களை திமுகவும், அதிமுகவும் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.

திமுகவும், அதிமுகவும் பணம் நிறைய வைத்துள்ளதால் பதவியை பெறுவதற்கு எதை வேண்டுமானாலும் செய்வார்கள். முந்தைய ஆட்சி காலங்களில் அரசு பதவிகள் விலை பேசி விற்க்கப்பட்டன. ஒவ்வொரு பதவிக்கும் ஒரு விலை என பணம் வாங்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் லஞ்சங்களை தடுக்க ரெய்டுகள் நடைபெற்று வருகிறது. பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குவதை தடுக்கும் போது பிரச்சினைகள் வருகிறது. 23 ஆண்டுகாலமாக டாஸ்மாக் துறையில் பாட்டிலுக்கு கூடுதலாக பணம் பெறப்படுகிறது. பாட்டிலுக்கு 1 ரூபாய் 50 காசு தொடங்கி 10 ரூபாய் வரை பெறப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.