வேளாண்மை-உழவர் நலத் துறையின் திட்டங்களைக் கள அளவில் செயல்படுத்திவரும் உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களில் அவ்வப்போது ஏற்படும் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 26 உதவி வேளாண்மை அலுவலர்கள். 43 உதவி தோட்டக்கலை அலுவலர்கள் என மொத்தம் 69 நபர்களுக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் பணிநியமன ஆணைகளை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, தருமபுரி. செங்கல்ராயன். சுப்ரமணிய சிவா மற்றும் கள்ளக்குறிச்சி-11 ஆகிய நான்கு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் செயலாட்சியர்கள் தேசிய அளவில் பெற்றுள்ள விருதுகளைக் காண்பித்து, முதலமைச்சரிடம் வாழ்த்துகளைப் பெற்றனர்.
வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 69 பேருக்கு முதலமைச்சர் விஜய் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.




