தமிழ் நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பேசும்போது சட்ட ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து திமுகவை கடுமையாக விமர்சித்தார்.
இதனால் திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து முதலமைச்சர் விஜய் திமுகவை விமரசித்தார். இதனால் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
இதனையடுத்து தனது உரையை தொடர்ந்த முதலமைச்சர் விஜய், “மக்கள் பணியில் திட்டங்களை செயல்படுத்த தான் நான் கால அவகாசம் கேட்டேன். வேறு காரணத்திற்கு நான் கால அவகாசம் கேட்டேன் என்று நினைத்துள்ளார்கள்.
திமுக டெக்னிக்கலாக மாற வேண்டும், பழைய மாடல் ஆக இருக்க வேண்டாம். சோபா மாடல் ஆட்சி இல்லை, அதை சட்டப்பேரவைக்கு வெளியே வைக்க வேண்டும்.
திமுக பேசுவது ஒன்று செய்வது ஒன்று. இந்த அரசை அவமானப்படுத்துவது தான் அவர்களுடைய வழக்கமாக இருக்கிறது. எங்களுக்கு பாடம் எடுப்பதாக நினைத்துக் கொண்டு உங்களுடைய வேஷம் கலைந்து கொண்டு வருகிறது” என்றார்.
இறுதியாக முதலமைச்சர் விஜய், திமுகவினர் இருந்திருந்தால் ஒரு ஆக்சன் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் என்று கூறி முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் போல சைகை செய்தார்.
2026 தேர்தலுக்கு முன் காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை முடிந்த பிறகு காரில் ஏறும்போது முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ‘எல்லாம் முடிந்து விட்டது’ என்பது போல சைகை காட்டினார்.





