உள்துறை சார்பில், 44 கோடியே 30 லட்சம் மதிப்பில், கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
சென்னை தலைமை செயலகத்தில், தடய மரபணு தேடல் மென்பொருளை முதலமைச்சர் ஸ்டாலின், பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். பின்னர், உள்துறை சார்பில் 44 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட காவலர் குடியிருப்புகள், காவல் நிலையங்கள், மற்றும் உதவி சிறை அலுவலர் குடியிருப்புகளை, காணொலி வாயிலாக, முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும், மார்த்தாண்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில், 3 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட, ஓட்டுநர் தேர்வுத் தளத்துடன் கூடிய அலுவலக கட்டடத்தினையும் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.







