முக்கியச் செய்திகள் இந்தியா

ஜம்மு காஷ்மீர்: சிஆர்பிஎஃப் வீரர்களின் நினைவிடத்தில் உள்துறை அமைச்சர் அஞ்சலி

ஜம்மு காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி இன்று அஞ்சலி செலுத்தினார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

மூன்று நாள் பணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள அமித்ஷா அந்த யூனியன் பிரதேசத்தின் பாதுகாப்பு, வளர்ச்சி உள்ளிட்டவைகள் குறித்து ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

2019ல் புல்வாமா தாக்குதல் நடந்த பகுதியில் நேற்றிரவு (அக்.25) சிஆர்பிஎஃப் வீரர்களுடன் தங்கி அவர்களுடன் கலந்துரையாடிய அமித்ஷா, பாஜக அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான சமரசமற்ற கொள்கையை கொண்டுள்ளதாக கூறினார்.

மேலும், தற்போது ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சி பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது என கூறினார். அதேபோல ஜம்மு காஷ்மீரில் முழு அமைதியை ஏற்படுத்தும் வரையில் பாஜக அரசு திருப்திகொள்ளப்போவதில்லையென்றும் கூறியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலை, புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். உடன் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின்னர் அமித்ஷா முதல் முறையாக ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தது.

Advertisement:
SHARE

Related posts

50% ஊழியர்கள் மட்டும் பணிக்கு வர வேண்டும்: புதுச்சேரி அரசு!

Halley karthi

கொரோனா தடுப்பூசி அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும் – நடிகர் பார்த்திபன் ட்வீட்

Gayathri Venkatesan

திமுக துணை அமைப்பு செயலாளராக அன்பகம் கலை நியமனம்

Gayathri Venkatesan