தமிழ்நாடு முதலமைச்சர் படிப்படியாக தான் இந்த பதவிக்கு வந்திருக்கிறார் என நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை நடிகர் பார்த்திபன் பார்வையிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த பார்த்திபன் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் படிப்படியாகத்தான் இந்தப் பதவிக்கு வந்திருக்கிறார். ஒவ்வொரு படிகளும் மோசமான படிகள் அதனை கடந்து தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார்.
நான் இன்று ஒரு புகைப்படத்தை பரிசாக கொடுத்திருக்கிறேன். அடுத்த ஆண்டு புகைப்பட கண்காட்சி வைக்கும் பொழுது அந்த புகைப்படமும் புகைப்படக் கண்காட்சியில் இடம்பெற வேண்டும் என்பதற்காக வழங்கியிருக்கிறேன்.
இதையும் படிக்க: ”மணீஷ் சிசோடியா அரசியல் காரணங்களுக்காக குறிவைக்கப்படுகிறார்” – பிரதமருக்கு பினராயி விஜயன் கடிதம்
பெரியாரை, அண்ணாவை நான் பார்த்ததில்லை. கருணாநிதியை பார்த்திருக்கிறேன். அவரை நான் தந்தையாக பார்க்கிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எவ்வளவு பொறுமையாக இருக்கிறார். இந்த புகைப்பட கண்காட்சியில் ஜெயலலிதாவுடன் எடுத்த புகைப்படம் ஒன்று இருக்கிறது. அதை பார்க்கும் பொழுது எவ்வளவு இணக்கமாக மாற்று அரசியல் கட்சியிடம் இருந்து இருக்கிறார் என்பது தெரிகிறது.
அண்மையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், தனியார் அமைப்பு ஒன்று, கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக கூறி பிரபலங்களை அழைத்து நிகழ்ச்சி நடத்தியது. இது பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இதில் நடிகர் பார்த்திபனும் கலந்துகொண்டார். இதுகுறித்து விளக்கமளித்தவர், இதற்கு முன் அண்ணா பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் தருவதாக கூறி ஏமாற்றியுள்ளனர். இதனால் நான் இதுபோன்ற போலியான ஆட்களை நம்புவதில்லை. அந்த நிகழ்ச்சியில் எனக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படவில்லை. அப்துல்கலாம் விருது தான் வழங்கப்பட்டது. இதுவரை 30க்கும் மேற்பட்டவர்கள் டாக்டர் பட்டம் தருவதாக கூறியுள்ளனர். நான் டாக்டர் பட்டம் பெரும் அளவிற்கு எல்லாம் இல்லை. ஒரு கம்பவுண்டர் பட்டம் கொடுத்தால் போதும் என்பேன் என நகைச்சுவையாக பேசி முடித்தார்.
அண்ணா பல்கலைக்கழக நிகழ்ச்சிக்கு சென்றபோது அது போலியான நிகழ்ச்சி என தெரிந்து கொண்டேன். ஆனால், அங்கு இருக்கும் யாருக்கும் காயம் ஏற்படுத்த வேண்டாம் என்று அமைதியாக வந்துவிட்டேன். இது போன்ற மோசடிகள் குறைக்கப்பட வேண்டும் என்றார்.
-ம.பவித்ரா