போட்டி தேர்வுகளுக்கு படிக்கும் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்றே ஆகவேண்டும்
என்ற வைராக்கியத்தை தங்கள் மனதில் ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என மாணவர்களிடம் தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்தார்.
சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் நிலம் கையகப்படுத்தும் புத்தகங்களின் தொகுப்பை தலைமை செயலாளர் இறையன்பு
வெளியிட்டார். பின்னர் அண்ணா நிர்வாக பணியாளர் பயிற்சி மையத்தில் டிஜிட்டல்
நூலகத்தை துவங்கி வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படிக்கவும்: தமிழில் குடமுழுக்கு நடத்த கருத்து கேட்பு கூட்டம்; இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு
பின்னர் கோயம்பத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் போட்டி தேர்வுகளுக்கான புதிய பயிற்சி மையத்தை காணொலி வாயிலாக திறந்து வைத்தார். அப்போது காணொலி வாயிலான உரையாற்றிய தலைமை செயலாளர் இறையன்பு, தமிழகத்தை பொறுத்தவரை மாணவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்க வேண்டும் என அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி சார்பில் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே சென்னையில் இரண்டு மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில் கோவையில் நான் படித்த வேளாண் பல்கலைக்கழகத்தில் பயிற்சி வகுப்புகளை துவங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இளநிலை உதவியாளர்கள் பணிகளுக்கு இந்த பயிற்சி மையத்தில் பயிற்சி வழங்க உள்ளோம்.போட்டி தேர்வுகளில் ஒவ்வொரு மதிப்பெண்ணும் முக்கியம். பல்கலைகழகம் தேர்வு வேறு
போட்டி தேர்வு என்பது வேறு. போட்டி தேர்வுகளை பொறுத்தவரை ஆழமாகவும், அகலமாகவும் படிக்க வேண்டும். நிறைய பொது தகவல்களை படிக்க வேண்டும். படிப்பதோடு மட்டும் இல்லாமல் அதுகுறித்து முழுமையாக விவாதிக்க வேண்டும்.
மாணவர்கள் தேர்வு குறித்து மன தயாரிப்பு செய்து கொள்ள வேண்டும். தனியாக
படித்துக் கொண்டு இருப்பதை விட மற்றவர்களுடன் கலந்து விவாதித்து படிப்பதில்
வித்தியாசம் உள்ளது. மாணவர்களுடன் சேர்ந்து படிக்கும் நேரத்தில் உற்சாகம்
மற்றும் ஆர்வம் ஏற்படும்.
போட்டி தேர்வுக்கு படிக்கும் அனைவரும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும்
என்ற வைராக்கியத்தை உருவாக்கி கொள்ள வேண்டும். 10 நிமிடங்கள் கூட ஏதோ ஒன்றை
உற்று கவனிக்க முடியாத ஒரு நிலையை நாம் தற்போது பார்க்கிறோம். பல மாணவர்கள்
தங்கள் கைபேசியை எடுத்து 5 நிமிடங்களுக்கு ஒரு முறை எடுத்து பார்க்கின்றனர்.
படிப்பதற்கு என ஒரு நேரம் மற்றும் இடத்தை ஒதுக்க வேண்டும் முதல் 21 நாட்கள்
சிரமமாக இருக்கும் அதன் பின் அது சரி ஆகிவிடும். படிப்பதோடு மட்டும் நிறுத்தி விடமால் மாதிரி வினாத்தாள் வைத்து உங்களை பரிசோதித்து கொள்ளுங்கள் என அறிவுரை கூறினார்.