புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் -முதலமைச்சர் ரங்கசாமி

மத்திய அரசை வலியுறுத்தி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். இந்தியத் தணிக்கை நாளை முன்னிட்டு புதுச்சேரி மாநில முதன்மை தணிக்கை மற்றும் கணக்காய்வு துறை மூலம்…

மத்திய அரசை வலியுறுத்தி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

இந்தியத் தணிக்கை நாளை முன்னிட்டு புதுச்சேரி மாநில முதன்மை தணிக்கை மற்றும் கணக்காய்வு துறை மூலம் குழு விவாதம் தனியார் விடுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ரங்கசாமி,மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்தும் போது சில நேரங்களில் தணிக்கை குழுவின் விதிகளை மீறி செய்ய வேண்டிய நிலை ஏற்படும், மக்களின் நலனுக்காக விதிகளைத் தளர்த்திச் செய்வதைத் தணிக்கை குழு ஏற்றுக்கொள்ள வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தார்.

மேலும் விதிகளைத் தளர்த்தும்போது அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும் ஆனால் அதிகாரிகளைத் தண்டிக்கும் வகையில் தணிக்கை குழுவின் கருத்துகள் இருக்கக் கூடாது என்றார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி, மத்திய அரசைவலியுறுத்தி மாநில அந்தஸ்து பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அத்துடன். மாநில அந்தஸ்து கிடைத்தால் புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி அடையும் என்பதால் மத்திய அரசு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் என்ற நம்பிக்கையுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.