தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிஉயிருப்பதாவது, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், கொன்னையார் கிராமத்தில் 03.09.2026 அன்று மாலை, கல்லூரியில் பயின்றுவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த சுபிதா (வயது 19), என்ற மாணவி பள்ளியில் பயின்றுவரும் தனது சகோதரிகளான நிவேதா (வயது 17), தனுஸ்ரீ (வயது 13) மற்றும் அபிநயா (வயது 12) ஆகியோரை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் செல்லும்போது, தனியார் கல்லூரிப் பேருந்தில் மோதிய விபத்தில் நிவேதா, தனுஸ்ரீ மற்றும் அபிநயா ஆகியோர் சம்பவ இடத்திலேயும், சுபிதா என்பவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்தேன்.
இவ்விபத்தில் உயிரிழந்த நான்கு மாணவிகளின் பெற்றோர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்குத் தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




