‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதாரண மனிதரல்ல’ – அமைச்சர் துரைமுருகன் வாழ்த்து

மு.க.ஸ்டாலின் சாதாரண மனிதரல்ல சரித்திரம் படைக்கப் போகும் தலைவர் என அமைச்சர் துரைமுருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து செய்தியில்,…

மு.க.ஸ்டாலின் சாதாரண மனிதரல்ல சரித்திரம் படைக்கப் போகும் தலைவர் என அமைச்சர் துரைமுருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து செய்தியில், ‘தளபதி முதல்வராகி ஒருமுறைதான் டெல்லி சென்றார் – அவர் மறுமுறை டெல்லி செல்வதற்கு முன்பே அரசியலில் அகில இந்திய நட்சத்திரமாக ஜொலித்துவிட்டார்’ எனவும், ‘முடியாத களம் ஒன்று நீட்டுக்கு, அதுமுடியும் வரை தளபதி சாதாரண மனிதரல்ல; சரித்திரம் படைக்கப் போகும் ஓர் யுகபுருஷன்’ என அவர் அந்த வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதேபோல, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள பிறந்த நாள் வாழ்த்து செய்தியில், ‘இந்தியாவை புதிய விடியலை நோக்கி அழைத்துச் செல்லும் பொறுப்பை அவர் ஏற்பார் எனவும், இந்தியத் திருநாட்டுக்கு ஒரு நல்லரசு தேவை. அந்தத் தேவையை நிறைவேற்றிக் காட்டும் வல்லமையும், துணிவும், அறிவாற்றலும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நிரம்ப உண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்தி: மகா சிவராத்திரி விழா; திட்டமிட்டபடி நடைபெறும் – அமைச்சர் சேகர் பாபு

மேலும், ‘தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பதை செய்து காட்டுவார்’ என தெரிவித்துள்ள அவர், கோடான கோடி உலகத்தமிழர்களில் ஒருவனாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவிப்பதாக திமுக பொருளாளர் டிஆர் பாலு கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.