துணை குடியரசு தலைவருடன் முதலமைச்சர் சந்திப்பு

சென்னை வந்துள்ள துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டின் நலன் சார்ந்த கோரிக்கை கடிதத்தை அவரிடம் அளித்தார். சென்னையில் தனியார் நிறுவனத்தில் நடைபெற்ற சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கு விருது வழங்கும்…

சென்னை வந்துள்ள துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டின் நலன் சார்ந்த கோரிக்கை கடிதத்தை அவரிடம் அளித்தார்.

சென்னையில் தனியார் நிறுவனத்தில் நடைபெற்ற சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கு விருது வழங்கும் விழாவில் பங்கேற்க துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று காலை சென்னை வந்தார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பேசுகையில்,தொழிற்சாலை தயாரிப்புகளுக்கு ஏற்ற சூழலை தமிழ்நாடு கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். இதன் மூலம் வாகனங்கள், வாகன உதிரிபாகங்கள், ஜவுளி, தோல் தயாரிப்புகள், இலகு – கனரக பொறியியல், பம்ப் மற்றும் மோட்டார்கள், மின்னணு, மென்பொருள் மற்றும் வன்பொருள் ஆகியவற்றின் மிகப்பெரிய முனையமாக விளங்குவதாக தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய அவர், திரைகடல் ஓடியும் திரவியம் தேடு – கடல் கடந்து சென்றாவது வருமானம் ஈட்டு என்ற ஒளவையாரின் பொன்மொழிகளை மேற்கோள்காட்டினார். அந்நிய செலாவணி பரிமாற்றத்தை ஈர்த்தல் மற்றும் நமது பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் ஏற்றுமதி முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்தார்.

சென்னை போட் கிளப் பகுதியில் அமைந்துள்ள துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இல்லத்தில் அவரை முதலமைச்சர் ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச்செயலாளர் இறையன்பு, நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு ஆகியோர் சந்தித்தனர். சந்திப்பின் போது மாநில நலன் சார்ந்த கோரிக்கைகளையும் கடிதமாக அளித்தார்.

ஆளுநருக்கும், மாநில அரசாங்கத்திற்கும் இடையே மோதல் போக்கு நிலவும் நிலையில், துணை குடியரசு தலைவருடான இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.