சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து கீழே விழுந்த நபரை பெண் காவலர் மீட்ட சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி வரை செல்லும் ராக்போர்ட் விரைவு ரயில் சரியாக பதினொன்று முப்பது மணி அளவில் சென்னையிலிருந்து புறப்பட்டது. அப்பொழுது 40 வயது தக்க நபர் ஒருவர் ஜெனரல் கம்பார்ட்மெண்டில் ஏறுவதற்கு பதிலாக குளிர்சாதன பெட்டிக்குள் தவறுதலாக ஏறியுள்ளார். இதையடுத்து உடனடியாக ஜெனரல் கம்பர்ட்மெண்ட் மாறுவதற்காக இறங்கியுள்ளார்.
https://www.youtube.com/watch?v=ZZWAvO0gcpw
அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்து ரயிலின் சக்கரத்திற்குள் விழ சென்றுள்ளார். இதனை பணியில் இருந்த ரயில்வே காவலர் மாதுரி என்பவர் கவனித்து தனி ஒரு ஆளாக அவரை காப்பாற்றியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.







