மதுரையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளான சம்பவத்தை தொடர்ந்து, பாதிக்கப்பட்டு இருந்த ரயில்சேவை மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.
கூடல் நகரில் இருந்து மதுரை நோக்கி வந்த சரக்கு ரயில், செல்லூர் பகுதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக மதுரை நோக்கி வந்த அனைத்து ரயில்களும் பாதி வழியில் நிறுத்தப்பட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சரக்கு ரயில் தடம்புரண்ட இடத்தில் மதுரை கோட்ட மேலாளர் ஆனந்தன் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து தடம் புரண்ட சரக்கு ரயிலில் இருந்து விபத்துக்குள்ளான பெட்டிகளை தவிர்த்து மற்ற பெட்டிகள் பிரித்தெடுக்கப்பட்டன.
தொடர்ந்து தடம் புரண்ட சரக்கு ரயில் முழுவதும் தண்டவாளத்திலிருந்து தொழில்நுட்ப குழுவினரால் அகற்றப்பட்டு, கூடல் நகர் ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்து நடந்த தண்டவாளம் வழியாக ரயில் சேவை 4 மணிநேரத்திற்கு பிறகு சீராகியது.
இதனையடுத்து மதுரை ரயில் நிலையத்தில் 3 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. ஒரே ரயில் நிலையத்தில் 3 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாயினர். இதனால் பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் செல்லாத முடியாத சூழல் உருவானது.