“சோத்துப்பாறை அணையை திறந்துவிட்ட தவெக-வினர்” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சோத்துப்பாறை அணையை அதிகாரிகளுக்கே தெரியாமல் திறந்துவிட்ட தவெக-வினர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையில் இருந்து தவெக நிர்வாகிகள் தண்ணிச்சையாக தண்ணீர் திறந்து விட்டதாக செய்திகள் வெளியாகின. இதற்கு பல்வேறு அரசியல் கடித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட தவெகவினர் மிது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் சோத்துப்பாறை அணையை திறந்துவிட்ட விவகாரத்தில் தொடர்புள்ள அனைத்து தவெக-வினர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையில் இருந்து அதிகாரிகளுக்கே தெரியாமல், தவெக கட்சியினர் தன்னிச்சையாக தண்ணீரை திறந்து விட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

சோத்துப்பாறை அணையில் இருந்து ஆயக்கட்டு புது வாய்க்கால் வழியாக
1000 ஏக்கர் விவசாய நிலத்திற்கு நீர் திறந்துவிட 90 நாட்களுக்கான நீர் இருப்பு இருக்க வேண்டிய நிலையில், தேவையான நீர் இருப்பு இல்லாததால் அதிகாரிகள் அணை திறக்க அனுமதி வழங்கவில்லை என தெரிகிறது .

இதனால், தன்னிச்சையாக பெரியகுளம் தவெக MLA சபரி ஐங்கரன் வழிகாட்டுதலில் தேனி வடகிழக்கு தவெக மாவட்ட இணைச் செயலாளர் ஷேக் அலி என்பவர் தலைமையில் தவெக கட்சியினரே அணையில் இருந்து நீரைத் திறந்துவிட்டு, அந்த ரீலை எடிட் செய்து வெளியிட
Late ஆகும் என்பதாலோ என்னமோ, Raw footage உடன் சமூக வலைதளங்களில் செய்தி வெளியிட்டு உள்ளனர்.

கடந்த 6 மாதங்களாக தவெக ஆச்சரியக்குறிகள் செய்யும் கூத்துகளையும் கோமாளித்தனங்களையும் பார்த்து, தமிழக மக்கள் தலையில் அடித்துக் கொண்டே சிரிக்கிறார்கள்.

திரைப்பட நகைச்சுவை ஒன்றில் நடிகர் செந்தில் “petromax” லைட்டில் உள்ள மேண்டிலை நசுக்கிவிட்டு, “இதுல எப்படி அண்ணே எரியும்?”
என்று கேட்பது போல, பல பர்னிச்சர்களை உடைத்து வருகின்றனர் இன்றைய ஆளுங்கட்சியினர்.

இப்படி Design Design-ஆக பிரச்சினைகளை இழுத்துவிடும்
இந்த Parallel Universe ஆச்சரியக்குறிகளிடம் இருந்து
மக்களைக் காப்பதா?
கலெக்டரைக் காப்பதா?
அணையைக் காப்பதா?
என்று நம்மை எல்லாம் குழப்ப வைத்தது தான் தவெக அரசின் மாபெரும் “வெற்றி”!

ஒரு அணையை திறந்துவிடுவது என்பது சாதாரணமாக கடந்து போகும் விஷயம் அல்ல. அணையில் இருந்து அதிகளவு வரும் நீர் கரையோரம் உள்ள மக்களுக்கும் நிலங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்ற குறைந்தபட்ச அறிவு கூட இல்லாமல், ஆட்சிக்கு வந்துவிட்ட மோகத்தில், ரீல்ஸ் வெறியில் குதியாட்டம் போட்டுக்கொண்டு மக்கள் உயிரோடும் ஜீவாதாரத்தோடும் விளையாடிக் கொண்டிருக்கும் தவெக அரசுக்கும் கட்சியினருக்கும் கடும் கண்டனம்.

சோத்துப்பாறை அணையை திறந்துவிட்ட விவகாரத்தில் தொடர்புள்ள அனைத்து தவெக-வினர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த ஆச்சரியக்குறி அரசை வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.