70வது பிறந்த நாளை கொண்டாடும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் கூறிவருகின்றனர். பிரதமர் மோடி , உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, கேரள முதலமைச்சர் பிணராயி விஜயன், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதேபோல் தேமுதிக தலைவர் விஜயகாந்த், காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி, பாஜக மாநில தலைவர் அண்ணாலை, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதேபோல் நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதனையும் படியுங்கள்: முதலமைச்சருக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, அமித்ஷா!
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் பல ஆண்டுகள் தொடர்ந்து மக்கள் சேவையாற்றிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இதனையும் படியுங்கள்: பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அதேபோல குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் எழுதியுள்ள பிறந்தநாள் வாழ்த்துக் கடிதத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் மக்கள் சேவையாற்றிட வேண்டும் என கூறியுள்ளார்.
– யாழன்