பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் வரும் 30ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் கடந்த 17ஆம் தேதி நடைபெறவிருந்த கூட்டம் முதலமைச்சரின் டெல்லி பயணம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், வருகிற 30ஆம் தேதி அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில், உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துதல், மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்துதல் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், நான் முதல்வன் திட்டத்துக்கேற்ப மாணவர்களை தயார்படுத்துதல் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படவுள்ளது.
மேலும் மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவது தொடர்பாகவும் துணைவேந்தர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-இரா.நம்பிராஜன்








