“ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துருவின் அறிக்கையின் பரிந்துரைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!!

சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை அதிகாரிகளோடு கலந்தாய்வு செய்து, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சந்துருவின் அறிக்கையின் பரிந்துரைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர்…

சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை அதிகாரிகளோடு கலந்தாய்வு செய்து, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சந்துருவின் அறிக்கையின் பரிந்துரைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள், பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல்பாட்டினையும் நிர்வாகத் திறனையும் மேம்படுத்துவதற்காக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் அறிக்கையினைக் குழந்தைகள் நாளான இன்று பெற்றுக்கொண்டேன்.

சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை அதிகாரிகளோடு கலந்தாய்வு செய்து, இந்த அறிக்கையின் பரிந்துரைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.

மதிப்பூதியம் ஏதும் பெற்றுக்கொள்ளாமல் குழந்தைகளின் நலனுக்கான இப்பணியை ஏற்றுக்கொண்டு அறிக்கை அளித்த நீதியரசர் சந்துருவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைப் பதிவு செய்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.